முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு
கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (11.07) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்
கடந்த 28 ஆம் திகதி 03 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞரை கடத்தி தாக்குதல் மேற்கொண்ட வழக்கில்
அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.