பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கி சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்படும் சந்தேகநபர்களை ஊடகங்களுக்கு வௌிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் இந்த நிலைமையை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.