ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சினால் நிதியை விடுவிக்க இயலுமென தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.