மாங்குளத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்

யாழ்ப்பாணம் மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட களவிஜயம் ஒன்றினை நேற்றுமுன் தினம் (15.07) முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

மாங்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ள பிரதேசத்தினை பார்வையிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சரின் கள விஜயம் அமைந்திருந்தது.

இக்கள விஜயத்தில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் M.M. நயுமுதீன்,மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முதலீட்டு ஊக்குவிட்டுச் சபை அதிகாரிகள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply