பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பத்துள்ளது.
ஞானசார தேரர் சமர்ப்பித்த மீளாய்வு மனுவை ஆராய்ந்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் மேல் நீதிமன்றத்தில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.