ஆதிக்கத்துடன் ஆசியக் கிண்ணத்தை ஆரம்பித்த இந்தியா

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றியீட்டியுள்ளது.  

தம்புள்ளையில் இன்று(19.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் அமீன்(Ameen) 25(35) ஓட்டங்களையும், டியூபா ஹசான்(Tuba Hassan), பாத்திமா சனா(Fatima Sana) ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தீப்தி சர்மா(Deepti Sharma) 3 விக்கெட்டுக்களையும், ரேணுகா சிங்(Renuka Singh), பூஜா(Pooja), ஸ்ரேயங்கா பாட்டீல்(Shreyanka Patil) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். 

109 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பில் சுமிருதி மந்தனா(Smriti Mandhana) 45(31) ஓட்டங்களையும், ஷஃபாலி வர்மா(Shafali Verma) 40(29) பெற்றுக்கொண்டனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சையதா அரூப் ஷா(Syeda Aroob Shah) 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, இந்த போட்டியில் குழு ‘ஏ’ உள்ள இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகியாக இந்திய அணியின் தீப்தி சர்மா(Deepti Sharma) தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply