ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னர், தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (22.07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் உரிய திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.