தேர்தலுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யத் தீர்மானம்

தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி மை, கடித உரை, பேனை, பென்சில், காகிதம் உள்ளிட்ட வாக்களிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரப்படவுள்ளது.

கிடைக்கப்பெறவுள்ள விலை மனு கோரல் விண்ணப்பங்களை எதிர்வரும், ஒகஸ்ட் மாதம் 02ஆம் திகதி திறக்கத் தீர்மானித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply