எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன அறிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று (04.08) இதனைத் தெரிவித்தார்.
அரசியலில் நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ கிடையாது என கூறிய அவர் தனது பிரதேச மக்களின் விருப்பத்திற்கு பணிந்தே ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.