மாவட்ட தலைமை பதவிகளுக்கு தற்காலிக புதிய நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
இதன்படி, அநுராதபுரம் மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளதுடன் காலி மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாத்தறை மாவட்டத்தின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மாவட்ட தலைவர்கள் சிலர் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.