குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுவிப்பு

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி உள்ளிட்ட 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 02ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

‘எதேர அபி’ என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உரிய அனுமதி பெறாமையால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாடகர்கள் தவிர்ந்து, இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக்குழுவினர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் இசைக்குழுவின் இசைக்கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

எவ்வாறாயினும், குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டில் இவர்களில் 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் இருவர் இன்னும் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply