வேட்புமனு தாக்கல் நிறைவு

வேட்புமனு தாக்கல் நிறைவு

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று(15) கொழும்பு, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நிறைவடைந்துள்ளது. 

கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களுள் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இன்று(15.08) காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய வேட்புமனு தாக்கல் 11 மணிக்கு நிறைவடைந்தது. 

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு 11.30 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது 3 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply