
2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு பத்திரம் கையளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் ஒன்றுகூடிருந்தனர்.
வேட்புமனுவை கையளித்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.