கொல்கத்தா பெண் வைத்தியர் கொலை சம்பவம் – வெடிக்கும் போராட்டங்கள்

கொல்கத்தா பெண் வைத்தியர் கொலை சம்பவம் - வெடிக்கும் போராட்டங்கள்

இந்தியாவின் கொல்கத்தாவில் பயிற்சி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு நீதி
கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் வைத்தியர் கடந்த 09 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதல் நாடாளாவிய ரீதியில் பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இந்த வழக்கு விசாரணையை மேற்கு வங்க அரசு மத்திய புலனாய்விடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இன்று சனிக்கிழமை காலை 06 மணி முதல் நாளை காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் அவசர சேவைகளை மாத்திரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply