ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18.08) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 07 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.