தேர்தல் தொடர்பில் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17.08) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், ஏனைய முறைப்பாடுகள் 15 கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply