இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (21.08) ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் 35 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் 17 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 8 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன, 11 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இங்கிலாந்தில் வைத்து 18 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இங்கிலாந்து அணி 8 வெற்றிகளையும், இலங்கை அணி மூன்று வெற்றிகளையும் பெற்றுள்ளன. 7 போட்டிகள் சமநிலை முடிவு.
இலங்கை அணிக்கா மிலன் ரத்நாயக்க 166 ஆவது டெஸ்ட் வீரராக தனது அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார்.
அணி விபரம்
இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, நிசன் மதுஷ்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய
இங்கிலாந்து அணி – ஒலி பொப்(அணித் தலைவர்), ஹரி ப்ரூக், பென் டக்கெட், டான் லோரன்ஸ், ஜோ ரூட், ஜமி ஸ்மித், க்றிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மத்தியூ பொட்ஸ், ஷொயீப் பஷீர், மார்க் வூட்