சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் அரச வைத்திய அதிகாரிகள்
சங்கத்தின் அதிகாரிகளுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்ந கலந்துரையாடல் பொரளை சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை (27.08) இடம்பெற்றது.
இதன்போது திலித் ஜயவீரவிடம் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து அவர் கவனம் செலுத்தியதாகவும் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பதற்காக மருத்துவத் துறைக்கு தனித்துவமான சம்பள முறைமை
முன்மொழியப்பட்டதாகவும், அது தொடர்பில் ஜயவீர அவதானம் செலுத்தியதாகவும் சுகதபால தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால, அதன் செயற்குழு உறுப்பினர்கள்மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேகொட ஆகியோர் கலந்துக்கொண்டனர்.