மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கவுள்ள பங்களாதேஸ் மகளிர் A அணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. பங்களாதேஸ் மகளிர் A அணியானது
இலங்கை மகளிர் A அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐந்து T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இதில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பனாகொடை இராணுவ மைதானத்திலும், இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்திலும் இடம்பெற உள்ளன.
அதனை தொடர்ந்து இடம்பெற உள்ள T20 சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான முதலாவது மற்றும் இரண்டாவது போட்டிகள் முறையே செப்டெம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொழும்பு சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து 3வது T20 போட்டி 13ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்திலும், 4வது T20 போட்டி 15ஆம் திகதி கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்திலும், ஐந்தாவதும் இறுதியுமான T20 போட்டி 19ஆம் திகதி கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.