நாட்டை 2022 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லவே முயல்கின்றனர் – அலி சப்பிரி

நாட்டை 2022 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லவே முயல்கின்றனர் - அலி சப்பிரி

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியன செலவுகளை அதிகரித்து வரவுகளை அதிகரிக்கும் திட்டங்களையே முன்வைக்கின்றன. இவற்றின் மூலம் நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டுக்கே செல்லுமெனவும், முன்னேற்றம் அடைய முடியாது எனவும் வெளிவிவகார, மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று(28.08) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். அனைத்தையும் தருவோம் என சொல்கிறார்கள். வரிகளை நீக்குவோம் என்கிறார்கள். வரிகளை ககுறைப்போம் என சொல்கிறார்கள். உங்கள் வீட்டை எடுத்துக்கொண்டால் செல்வுகளை அதிகரித்து வரவுகளை குறைத்தால் கடன் அதிகரிக்கும். அவ்வாறு கடன் அதிகரித்தால் கடன் கிடைக்காமல் போய்விடும். பிறகு நிலைமை மோசமாகிவிடும். அவ்வாறான நிலைக்கு கொண்டு செல்லவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என அலி சப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் செயற்படுத்தி வரும் திட்டங்களை அழகிய வார்த்தைகள் போட்டு சோடித்து தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுளளதாக அலி சப்ரி விமர்சனத்தை வெளியிடடார். சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு அதன் திட்டங்களை மீள மாற்றியமைப்பார்கள் என கூறுகின்றனர். அதற்கு 1 வருடம் எமது அரசாங்கத்துக்கு எடுத்தது. அதன் பின்னர் கூட்டங்களுக்கு மேலும் 1 வருடம் எடுக்கும். ஆகவே மீண்டும் நாட்டை அதள பாதாளத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடு அது. இந்த வருட இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளன. அதன் பின்னர் உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் 900 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வரவுள்ளன. இவற்றின் மூலம் நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் மீண்டும் 2 வருடங்களுக்கு முன்னர் சந்தித்த நிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளார்.

ஜே.வி.பி பல திட்டங்களை செய்யப்போகிறோம் என சொல்கிறார்கள். கல்வியில், சட்டத்தில் தாம் செய்யப்போகிறோம் என கூறும் பல விடயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. 40 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த விடயங்களை தாம் இப்போது செய்யப்போவதாக சொல்கிறார்கள். அவர்கள் 40 வருடம் பின்னுக்கு நிற்கிறார்கள். நாம் 40 வருடங்கள் முன்னுக்கு நிற்கிறோம். ஆக செய்துகொண்டு இருக்கிற திட்டங்களை தொடர்ந்து செய்ய மாற்றம் ஒன்று தேவையா? அதற்கு தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்வது சிறந்ததுதானே என மேலும் அவர் கேள்வியெழுப்பினார்.

Social Share

Leave a Reply