இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியமைக்கு, மின்சார சபை தலைமையகத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், மின்சார சபையின் தலைமையகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் ஒன்றிணைந்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
