பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி – தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இன்று (01/12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது பண்ணை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து, சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்நிலையில் சுப்பிரமணியம் சிவபாலனை பண்ணை வீட்டிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

அத்துடன் அவரது மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

Social Share

Leave a Reply