‘அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர்’

மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (01/12) இடம்பெற்ற சுகாதார அமைச்சு சார் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பதவிகளில் பெரும் பற்றாக்குறைக் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

இங்குக் காணப்படும் பதவிநிலை வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

‘அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர்'

Social Share

Leave a Reply