
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று முன்தினம்(31.09) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டது.
இருப்பினும், பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணத்திலும் மாற்றமில்லை என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.