ரணில் – சஜித் இணையவுள்ளனரா? – விளக்கமளித்த நளின் பண்டார  

ரணில் - சஜித் இணையவுள்ளனரா? - விளக்கமளித்த நளின் பண்டார  

சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், ரணிலின் ஆதரவாளர்கள் தற்பொழுது ரணிலும் சஜித்தும் இணையவுள்ளதாகக் கட்டுக்கதைகளைக் கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

தம்முடைய கட்சியினர் அவ்வாறு இணையப் போவதில்லை என்றும், ரணிலுடன் இணைந்து கொண்டால் தம்முடைய பெறுமதியும் குறைவடையும் எனவும், கொழும்பில் இன்று(03.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சிலர் உருவாக்கும் கட்டுக்கதைகளைக் கேட்டு ஏமாற வேண்டாம். ராஜபக்‌ஷவினரை பாதுகாத்துக் கொண்டு, 2019ம் ஆண்டு சஜித்தை வெற்றியைப் பறித்த சிலருடன் இணைத்துக் கொண்டு பொய்யான கருத்துக்களை உருவாக்குகின்றனர்.

தற்பொழுது சிவப்பு யானைக் குட்டிகளும் ரணிலும் சஜித்தும் இணையவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது ஒவ்வாமை கொண்டவர்களுக்கும், மதத்தின் மீது நம்பிக்கையற்றவர்களிடம் நாடு சென்றால், பாரியப் பிரச்சினை தோற்றம் பெறும்.

கடந்த முறை நாம் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் கூட்டங்களை நடத்தவில்லை. இருப்பினும் சஜித் பிரேமதாசவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

அனுர குமாரவின் கட்சியினர் சமூக வலைத்தளங்களுக்கு 3 பில்லியன் ரூபா செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கொண்டு கிராமங்களிலும், நாட்டிலும் உள்ள நபர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள இயலாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply