
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் நாடாளுமன்றத்தில்
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது தீர்மானத்தை அறிவித்தார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஊழல் மற்றும் மோசடி மூலம் தேசத்தை அழிக்க நினைக்கும் குழுவை எதிர்த்து நிற்கவும் இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக
அவர் கூறியுள்ளார்.
அருந்திக பெர்னாண்டோ புத்தளம் மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.