அத்தியாவசிய பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயம்  

அத்தியாவசிய பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயம்  

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் அதிகார சபை கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பருப்பு 270 முதல் 303 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 180 முதல் 232 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 910 முதல் 1050 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply