உலக தொழில் சந்தைக்கேற்ற வகையில் கல்வியில் மாற்றம்

உலக தொழில் சந்தைக்கேற்ற வகையில் கல்வியில் மாற்றம்

உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

பண்டாரவளை சுப்பிரமணியம் மண்டபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகைக் கட்டியெழுப்பவே இந்த நாட்டைக் கட்டி எழுப்பி மக்களைப் பாதுகாத்து எமது அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றோம்.

இந்த நாட்டில் வியாபாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த நாட்டின் பொருளாதாரம் கிராமத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாலேயே இடம்பெறுகிறது.

அவர்களிடமிருந்து வரிகளை அறவிடுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஏற்றக்கொள்ளக்ககூடிய வகையில் வரி விதிக்கப்பட வேண்டும்.

கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். உலக வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றவாறு நம் நாட்டின் கல்வி முறை மாற்றப்பட்டு வருகிறது. நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையாமல் சர்வதேச அமைப்பாக வரிகளை விதித்து இந்த நாட்டில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply