இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சுமார் 385 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 9,631 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 511 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 4,860 மில்லியன் ரூபாவாகும்.
கேரள கஞ்சா, ஹாஷிஸ் போதைப் பொருள், போதை மாத்திரைகள் உள்ளிட்டவையும் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப் பொருள் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட 11 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.