நைஜீரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் கொள்கலன் மற்றும் ட்ரக் ரக வாகனம் ஆகியன ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 59 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது, ட்ரக் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கால்நடைகளும் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.