பால் மாவின் விலையைக் குறைத்த உள்நாட்டு நிறுவனம்

பால் மாவின் விலையைக் குறைத்த உள்நாட்டு நிறுவனம்

உள்நாட்டுப் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ, இன்று(10.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மா உற்பத்திகளுக்கான விலையைக் குறைத்துள்ளது.

இதன்படி, 1 கிலோ கிராம் மில்கோ பால் மா பாக்கெட்டின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 2,585 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் மில்கோ பால் மா பாக்கெட்டின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1050 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply