குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெருந்தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெருந்தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

கண்டி, பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 3 பெருந்தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 3 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

30, 40 மற்றும் 55 வயதான மூன்று நபர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் மடகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், 55 வயதான ஆண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply