மாத்தளை – மட்டக்களப்பை இணைக்க அதிவேக வீதி: நாமல் உறுதி

மாத்தளை - மட்டக்களப்பை இணைக்க அதிவேக வீதி: நாமல் உறுதி

மாத்தளை – மட்டக்களப்பை இணைக்கும் அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அதிவேக வீதியினூடாக, தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிக்கவும் எதிர்பார்ப்பதாக மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போது நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில அரசியல்வாதிகள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தமிழ்ச் சமூகத்திற்கு வெற்று வாக்குறுதிகளை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைய தலைமுறையினருக்கு வளமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகத் தாம் கவனம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply