விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 75 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்  

விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 75 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்  

கொலம்பியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து 2 கிலோ கிராமுக்கு அதிக நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய களஞ்சிய முனையத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 75 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலம்பியாவிலிருந்து, கம்பஹா-கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து இலத்திரனியல் சாதனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply