
இந்தியா, சென்னையில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் இளம் வீர வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆடவருக்கான 100 மீட்டர் ஒட்டத்தில் இலங்கை வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஓட்டத்தை 10.41 செக்கன்களில் நிறைவு செய்த மெரோன் விஜேசிங்க தங்கப்பதக்கத்தையும், ஓட்டத்தை 10.49 செக்கன்களில் நிறைவு செய்த தினேத் இந்துவார வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
மகளிருக்காக 100 மீட்டர் போட்டியில் இலங்கையின் ஷனெலா செனவிரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவர் ஓட்டத்தை 12.04 செக்கன்களில் நிறைவு செய்தார்.
ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் சவிது அவிஷ்க தங்கப்பதக்கம் வென்றார். இவர் ஓட்டத்தை 1:49.83 நிறைவு செய்தார்.
மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப்பதக்கம் வென்றார். இவர் ஓட்டத்தை 2:10.17 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
மேலும், போட்டியை 2:12.13 நிமிடங்களில் நிறைவு செய்த இலங்கையின் சன்சலா ஹிமாஷானி வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையின் டி.வி.டிமேஷி வெள்ளிப் பதக்கத்தையும், நேத்ரா சமாதி வெண்கலப்பதக்கதையும் சுவீகரித்தனர்.
ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் இலங்கையின் ஜெயவி ரன்ஹிதா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.