26 வயதுடைய மகனைக் கொலை செய்த தந்தை

26 வயதுடைய மகனைக் கொலை செய்த தந்தை

தந்தையினால், மகன் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்மலானை பொருபன பிரதேசத்தில் நேற்று(11.09) பதிவாகியுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் அவரது மனைவி மற்றும் மகனைக் கூறிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக இரத்மலானை பொருபன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தந்தை தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply