உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது – அமைச்சர் சுசில்

உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது - அமைச்சர் சுசில்

உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(12.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,  

” அடுத்த வருடம் ஜனவரி மாதம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெறவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் காரணமாகவே, அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு திறைசேரியினுடாக நிதி ஒதுக்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சரவையின் அனுமதி பெற்றே வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். நாம் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துள்ளோம், என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்.

நாம் குறைந்தபட்ச சம்பளம் 55,000 ரூபாய் எனக் கூறியவுடன், எதிர்க்கட்சியில் உள்ள சிலர் 2,500 ரூபாயைச் சேர்த்து 57,500 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாகக் கூறுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply