வரி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

வரி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் வரி வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நேற்று(12.09) வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஒகஸ்ட் இறுதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,229,245 மில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த வருடத்தில் குறித்த காலப்பகுதியில் 956,418 மில்லியன் ரூபாவே வரி வருமானமாகப் பெறப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply