ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்ய வேண்டும் – நாமல்

ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்ய வேண்டும் - நாமல்

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் தம்மிடம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் நேற்று (14.09) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

“இன்று ஒவ்வொரு வேட்பாளரும் அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் பற்றி பேசுகிறார்கள்.
ஆனால் இந்த வேட்பாளர்கள் அனைவரும் 2015 ஆம் ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வெள்ளை யானைகள் என்று அழைத்தவர்கள், இன்று மஹிந்த ராஜபக்ச செய்த அபிவிருத்தியை ஏற்று முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளனர்.

இந்த நாட்டில் விவசாயம் செய்யக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்ய வேண்டும். உர மானியத்தை நாம் வழங்குவோம்.
விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முடிவை நாங்கள் எடுப்போம்.

சில தலைவர்கள் ஐந்தாண்டுகளுக்கான பணத்தைக் ஈட்டுவதற்கு வளங்களை விற்று வரம்பற்ற வரிகளை விதிக்கின்றனர்.
நாம் அதனை செய்ய மாட்டோம், நாங்கள் ஐந்து வருடங்களில் அரசியலை முடிப்பவர்கள் அல்ல.

இந்த தாய்நாட்டை ஆசியாவிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதுடன் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான வேலைத்திட்டத்தையும் நான் சவாலாக ஏற்றுக்கொள்கிறேன்” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply