இயலும் அரசாங்கத்தால்‌ புலமை பரிசில் பரீட்சையை கூட‌ நடத்த முடியவில்லை – சஜித்

இயலும் அரசாங்கத்தால்‌ புலமை பரிசில் பரீட்சையை கூட‌ நடத்த முடியவில்லை - சஜித்

“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 70 ஆவது மக்கள் வெற்றி பேரணி அம்பலாங்கொடையில் இன்று (18.09) நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பரீட்சைக்கு முன்பதாகவே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக உரிய நியாயத்தை பெற்றுக் கொடுப்போம். இயலும் என்று கூறிக் கொள்கின்ற இந்த அரசாங்கத்தினால் புலமைப் பரிசில் பரீட்சையையேனும் முறையாக நடத்த முடியாமல் போயுள்ளது.

இந்த வினாத்தாள் வடமேல் மாகாணத்தில் எந்தப் பகுதியில் வெளியாகி இருக்கின்றது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எந்தக் கட்சிக்குரியவர் இந்த வினாத்தாள் கேள்விகளை லீக் செய்தார் என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயத்தை அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்கின்றோம். இது குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும்.

21 ஆம் திகதி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று 220 இலட்சம் மக்களுடைய யுகம் ஆரம்பமாகின்ற போது ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் திருட்டு ஒப்பந்தம் நிறைவுக்கு வரும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தலதா மாளிகையில் ஆசீர்வாதங்களை பெற்று மக்கள் முன்னிலையில் வைத்து ஆரம்பித்த தேர்தல் பிரச்சார பணிகள் இன்றோடு நிறைவடைகின்றது.

அத்தோடு எமது வெற்றியை அமைதியான முறையில் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தோடும் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்‌”

வெற்றியோடு நாட்டை கட்டி எழுப்பும் வேலைத்திட்டங்களும் வரும். துன்பத்தில் இருக்கின்ற மக்களை இன்பத்தின் பக்கம் கொண்டு செல்வதற்கு ஜேவிபி, ஐதேக, மொட்டு என்று சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

Social Share

Leave a Reply