இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல்
இன்று (21.09) நடைபெற்ற நிலையில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுகுமார திசாநாயக்க ஆகிய பிரதான வேட்பாளர்கள் மூவரும் வரிசைகளில் நின்று தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தினர்.
மேலும், நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இன்று நள்ளிரவுக்குள் தபால் வாக்குகளின் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டாலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணியை நாளை முடித்துவிடுவோம் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.