தேர்தல் திணைக்களம் இறுதி முடிவை இன்று(22.09) வழங்கினால் இன்றே அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக பதவியேற்கும் நேரத்தை உறுதிப்படுத்த இயலாது எனத் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.