பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு நேர்ந்த கதி

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு நேர்ந்த கதி

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் குறித்த லொறி பொலிஸாரின் உத்தரவை மீறி நிற்காமல் முன்னோக்கிச் சென்றதால் பொலிஸார் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் லொறியில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த லொறி மாடுகளை ஏற்ற பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply