இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் வரையறை 150 மில்லியன் ரூபவாக அதிகரிப்பு

இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் வரையறை 150 மில்லியன் ரூபவாக அதிகரிப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளுக்குப் பணத்தை வழங்குவதற்காகச் சுற்றிவளைப்பு முற்பண கணக்கு பேணப்படுகிறது.

குறித்த முற்பணக் கணக்கின் உச்ச செலவு வரையறை ரூபா 50 மில்லியன் ஆகும்.

இலஞ்சமாக வழங்கப்படும் தொகையை நிச்சயித்துத் தீர்மானிக்க முடியாது என்பதனாலும், தற்போது கிடைக்கும் இலஞ்ச முறைப்பாடுகளின் தன்மைக்கு ஏற்பவும் இலஞ்சமாக கோரப்படும் தொகை மிகவும் உயர்வான பெறுமானத்தில் இருப்பதனால் குறித்த உச்ச செலவு வரையறையை விரைவாகத் திருத்தம் செய்ய வேண்டும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் உச்ச செலவு வரையறையை ரூபா 150 மில்லியன் வரை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply