இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள மின் தடை இன்று முதல் நிறைவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் திருத்த பணிகள் இன்றோடு நிறைவடையும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து மின் முழுமையாக பெறப்பட்டால் மின் தடை நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின் தடை அமுல்செய்யப்பட்டு வருகிறது. பகல் வேளையில் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மின் தடை ஏற்பட்டதாக சந்தேகம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் முகாமையாளர் தெரிவித்திருந்தார். ஆனால் மாலை வேளையில் நுரைச்சோலை விவகாரம் அறிவிக்கப்பட்டு கடந்த மூன்று தினங்களாக இரவு வேளைகளில் இலங்கையின் பல இடங்களிலும் மின் தடை அமுல்செய்யபபட்டது.
இந்த மின் தடையே இன்று முதல் இரத்து செய்யப்படுமென நம்பப்படுகிறது.
