சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்க தயார் – அநுர

சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்க தயார் - அநுர

தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (03.11.24) மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலின் போது, பலவீனமான அரசியல்வாதிகளே தேசிய மக்கள் சக்தியை அவதூறதகப் பேசினர்.
ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை என்பதை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால் நாட்டில் வன்முறை ஏற்படும் என்றார்கள். ஆனால் அவ்வாறொன்றும் இடம்பெறவில்லை.
இனிமேல் இதுபோன்ற அரசியலை அனுமதிக்க மாட்டோம்.இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

25 அமைச்சர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்கி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply