பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த மனு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த மனு - உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாராளுமன்றத் தேர்தலை 14 ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (04.11) நிராகரித்துள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தேர்தல் திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply