கிளிநொச்சியில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு

கிளிநொச்சியில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு

நவம்பர் மாதம்14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வொன்று கிளிநொச்சியில் இன்று (05.11) நடைபெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், காலை 11.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இதன்போது உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் உதவித் தேர்தல் ஆணையாளர் D.C அரவிந்தராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply