அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள்

அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள்

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.

அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால்
தயாரிக்கப் பட்ட வீதி நாடகமே நேற்றைய தினம் மன்னார் பஸ் நிலையத்தில்அரங்கேற்றப்பட்டடுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குறித்த வீதி நாடகமானது வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரங்கேற்றப்படும் நோக்கில்
கடந்த நான்காம் திகதி (4) யாழ்ப்பாணத்திலும், ஐந்தாம் திகதி (5) முல்லைத்தீவிலும், ஆறாம் திகதி (6)கிளிநொச்சியிலும்,
நேற்று மன்னாரிலும் அதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேசத்திலும்
அரங்கேற்றப்பட்டுள்ளது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply