அறுகம்பே சம்பவம் – பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டதாக தகவல்

அறுகம்பே சம்பவம் - பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டதாக தகவல்

ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க அறிவுறுத்தப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அறுகம்பே பகுதியில் பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை இரு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் ட்ரம்பிற்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை.

இந்நிலையில் 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. ட்ரம்பைக் கொலை செய்ய திட்டமிட்டதாக ஃபர்ஹாத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரான் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்க அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Social Share

Leave a Reply